விழித்தெழுங்கள் செவிலியர்களே*...
*விழித்தெழுங்கள் செவிலியர்களே*...
இன்னும் எத்தனை நாள் பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாமல் அச்சதுடன் பணி செய்ய போகிறோம் தோழிகளே..
இப்போது நந்தினி செவிலியருக்கு நடந்தது நாளை நமக்கும் நடக்கலாம்...
கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் ஒரு ராணுவ வீரரின் மனைவியை தாக்கி சென்ற கயவர்கள் தண்டிக்க படும்வரை நம் எதிர்ப்பலை தொடரும்...
இன்று நாம் வெளிப்படுத்தும் எதிப்பு குரல் நாளை நம் அனைவருக்கும் பாதுகாப்பு அரண் அமைக்கும்...
ஒன்றுபடுவோம்!!
போராடுவோம்!!!
வெற்றி பெறுவோம்!!!
👍👍👍👍🔥🔥🔥
தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி வட்டாரம் செவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியரை தாக்கிவிட்டு அவரின் செயின் மற்றும் கைப்பேசியை கொள்ளையடித்து சென்ற சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யவும்
*செவிலியர்களுக்கு பணி இடத்தில் உரிய பாதுகாப்பு வழங்க கோரி* மாவட்ட இணைச் செயலாளர் தோழர் பச்சை நாச்சி தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழர் நான்சி வரவேற்புரையாற்றினார்.தோழர் கலையரசி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
மாநில பொதுச்
செயலாளர் சுபின் சிறப்புரையாற்றினார்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் பால் பாண்டி, மாவட்ட செயலாளர் தோழர் பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் தோழர் சுந்தர்ராஜ், மாவட்ட இணைச் செயலாளர் தோழர் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவர் தோழர் பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாநில இணைச் செயலாளர் அஸ்வினி கிரேஸ் ஜெயப்ரியா நிறைவுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும்தோழர் மகேஸ்வரி நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து எம்ஆர்பி செவிலியர்கள், அனைத்து துறை ஊழியர்கள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
*ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட மையத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.*
🙏🙏🙏🙏🙏💐💐💐
தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
🙏🙏🙏🙏🙏🙏